ஜெ. சிகிச்சை வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் – டாக்டர் சரவணன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை எம்.எல்.ஏ. வெற்றிவேல் வெளியிட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
ஆர்.கே.நகர் தேர்தல் நாளை நடைபெறும் தருனத்தில் இன்று ஜெயலலிதா பற்றி ஒரு சில நிமிடங்களே உள்ளடக்கி வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. இது அரசியல் உள்நோக்கத்திற்காகவே வெளியிடப்பட்டுள்ளது தேர்தலை மனதில் வைத்து செய்யக் கூடிய செயலாகவே நான் கருதுகிறேன்.
75 நாட்கள் சிகிச்கையின் போது வெளியிடப்படாத ஒரு வீடியோ அவர்கள் இறந்து ஒரு வருடம் கழித்து வெளியிடப்பட்டுள்ளது என்பது சந்தேகத்தை உருவாக்குகிறது. இதுதொடர்பாக தடயவியல் துறையின் மூலம் விசாரணை நடத்தப்படவேண்டும் அவ்வாறு செய்யும்போது அது எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்பது மற்றும் அதன் உண்மை தன்மையும் தெரியும் என்றார். இந்த வீடியோ இந்த தேர்தலுக்காகவே வெளியடப்பட்டது என்பது தெரியவருகிறது என்றார்.
- சாகுல்