Skip to main content

உச்சநீதிமன்றத்தில் ஜெ.,கைரேகை வழக்கு; மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; திமுக சரவணன்!

Published on 09/12/2017 | Edited on 09/12/2017
உச்சநீதிமன்றத்தில் ஜெ.,கைரேகை வழக்கு; மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; திமுக சரவணன்!

ஜெயலலிதா கைரேகை குறித்த வழக்கில் ஏ.கே.போஸ் உச்சநீதிமன்றத்துக்கு வழக்கை கொண்டு சென்றது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என
திமுக மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கட்சியை சேர்ந்த ஏ.கே.போஸ் அவர்களின் வெற்றி பல முறைகேடுகள் செய்து பெற்ற வெற்றி என திமுக கட்சியின் சார்பாக நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். 6 மாத காலம் வழக்கு சென்றது. இந்நிலையில் ஏ.கே.போஸ் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்கை உச்சிநீதிமன்றத்துக்கு மாற்றியது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

படிவம் ஏ, பி யில் கைரேகை வாங்கும் போது ஆர்.டி.ஓ முன்னிலையில் தான் வாங்க வேண்டும். அதைவிடுத்து, மருத்துவர் முன்னிலையில் வாங்கியது சட்டத்திற்கு முரணானது, ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது தான் கைரேகை வாங்கப்பட்டது. அவர் டிசம்பர் 2ஆம் தேதி வரை உயிரோடு தான் இருந்தார் என்று டாக்டர் பாலாஜி கூறியுள்ளார். அது நம்பகத்தன்மையற்றது.

போரோஸ்கோப் சிகிச்சையின் மூலம் உண்மையை கண்டறிய வேண்டும். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசனை நடத்திய பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

- ஷாகுல்

சார்ந்த செய்திகள்