ஜெ., நினைவிடத்தில் மரியாதை செலுத்த தீபா, மாதவன் வருகை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., நினைவிடத்தில், எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையின் நிறுவனர் தீபா, அவரது கணவன் மாதவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நள்ளிரவு சுமார் 12.20 மணியளவில் மரியாதை செலுத்திய தீபா, பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அ.தி.மு.க.,வை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம். காவல்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது தமிழகம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகவே என் அரசியல் செயல்பாடுகள் இருக்கும்.
-ஜீவாபாரதி