இஸ்ரோ தலைவராக சிவன் நியமனம் - உற்சாகத்தில் ஊர்மக்கள்!
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சிவனின் சொந்த ஊரான நாகா்கோவில் சரக்கல்விளை ஊா்மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டின் கௌரவமான மிக முக்கிய பதவிகளில் ஒன்றான இஸ்ரோ தலைவராக முதன்முதலில் தமிழகத்தைச் சோ்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்து வளா்ந்த சிவன் நியாமிக்கப்பட்டுள்ளார்.
சரக்கல்விளை அரசு தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய சிவன் தற்போது திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக உள்ளார்.
அவா் இஸ்ரோ இயக்குனராக நியாமிக்கப்பட்டதை அடுத்து, அவருடைய சொந்த ஊரில் உறவினா்கள் நண்பா்கள் மகிழ்ச்சியில்உள்ளனர். தற்போது அவா் வாழ்ந்த வீட்டில் அவருடைய அண்ணி மற்றும் குழந்தைகள் வசிக்கிறார்கள். இவா்களை சந்தித்து சிவனின் நண்பா்கள் அவருடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தவா்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அவா் படித்த அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியா் கழகத்தினா் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
அப்போது குழந்தைகள் ஒவ்வொருவரும் தாங்களும் வருங்காலத்தில் விஞ்ஞானிகளாக ஆவோம் என்று உறுதிமொழி எடுத்தனா்.
- மணிகண்டன்