ஐபிஎல் கிரிக்கெட் கேளிக்கை! இன்று ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் கேளிக்கையா? என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என திரைத்துரையினர், அரசியல் கட்சியனர் என பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 10ஆம் தேதி பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர்கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியின் போது, செருப்பு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றது.
இதேபோல், காவிரி பிரச்னையை விட கிரிக்கெட் போட்டியை நடத்துவது முக்கியமாகி விட்டது வேதனை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற இருந்த அடுத்தடுத்த போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,
ஐபிஎல் கிரிக்கெட் கேளிக்கை என எதிர்த்த திரைத்துறையினர் நாளை ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் கேளிக்கையா?என்ற கேள்விக்கு பதில்சொல்வார்களா?திரைப்படத்தை பார்க்கச்செல்லும் தமிழர்களை அடிப்பார்களா?இல்லை தங்கள் துறை என்பதால் தெரியாதது போல் நடிப்பார்களா? https://t.co/pC0jOUpzaa
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 19, 2018
ஐபிஎல் கிரிக்கெட் கேளிக்கை என எதிர்த்த திரைத்துறையினர் இன்று ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் கேளிக்கையா? என்ற கேள்விக்கு பதில்சொல்வார்களா? திரைப்படத்தை பார்க்கச்செல்லும் தமிழர்களை அடிப்பார்களா? இல்லை தங்கள் துறை என்பதால் தெரியாதது போல் நடிப்பார்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|