Published on 06/07/2021 | Edited on 06/07/2021

கரூர் மாவட்டத்தில் மக்கள் சபை கூட்டம் மூலம் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, அதற்கான தீர்வுகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இன்று (06.07.2021) நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும், அதற்கான திட்டம் குறித்து முதலமைச்சரோடு ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்ததார். மேலும், கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் நான்காயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மனுக்கள் அனைத்தும் முழுமையாக விசாரணை செய்யப்பட்டு அதற்கான தீர்வுகள் உடனடியாக காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.