Skip to main content

தமிழக அரசு சுயமாக செயல்படாத அளவிற்கு மத்திய அரசின் தலையீடு உள்ளது –திருமாவளவன்

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
தமிழக அரசு சுயமாக செயல்படாத அளவிற்கு மத்திய அரசின் தலையீடு உள்ளது –திருமாவளவன்

தமிழக அரசு சுயமாக, சுதந்திரமாக செயல்படாதஅளவிற்கு மத்திய அரசின் தலையீடு உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், 

தமிழகத்தில் பரவிவரும் டெங்குகாய்ச்சலுக்கு 85 பேர் பலியான நிலையில் மத்திய மாநில அரசு பொறுப்பேற்ககோரியும், தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியும், இழப்பீடு வழங்ககோரியும் விடுதலை சிறுத்தைகள்க ட்சி சார்பில் நாளை ஆர்பாட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு நடத்தாமல் இருப்பது வேதனைக்குள்ளாக்கியுள்ளது, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதுபோன்ற அசாதாரண சூழலின் போது மத்திய அரசு தலையிட்டு உரிய தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், ஆனால் மத்திய அரசு பாராமுகமாக இருப்பதோடு தமிழகஅரசை பழிசுமத்துகிறது, அதேநேரத்தில் மாநிலஅரசு துரிதமாகவும் செயல்படவேண்டும். 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் தாக்குதல் புதியது இல்லை, இதனை கண்டிக்கிறது விசிக, மத்தியஇஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நடராஜனுக்கு மாநிலஅரசின் வழிமுறை மற்றும் விதிமுறைப்படிதான் உறுப்புகள் கிடைக்க அனுமதிஅளித்துள்ளது, 

அவர்நலம்பெற்றுதிரும்பியபின்னர் விசாரணை மேற்கொள்ளட்டும் என்றார், மேலும் ஆட்சியை தக்கவைப்பதற்கான நடவடிக்கையில் அரசு மேற்கொள்கிறது, அவர் எப்படி பெரும்பான்மை நிரூபிக்க நடவடிக்கை மேற்கொள்வார், புதியஆளுநர் காலம்தாழ்த்தாமல் இதற்கான செயலில் விரைந்து மேற்கொண்டு நல்லமுடிவை எடுக்கவேண்டும், உள்ளாட்சிதேர்தல் முடக்கப்பட்டதற்கு ஆளும்கட்சியின் இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டதே காரணம், ஆனால் நேர்மையானமுறையில் தமிழக அரசு உள்ளாட்சிதேர்தலை விரைந்து நடத்தவேண்டும், மேலும் உள்ளாட்சிதேர்தலே நடக்குமா என்ற எண்ணத்தில் கூட்டணி குறித்து கருத்துகூறமுடியாது, 

தமிழக அரசு சுயமாக, சுதந்திரமாக செயல்படாதஅளவிற்கு மத்திய அரசின் தலையீடு உள்ளது, மத்திய அரசின் தலையீடு இல்லையென்றால் தமிழக அரசு சிறப்பாக செயல்படும் என்று நம்புவதாக தெரிவித்தார், ஹஜ்பயணத்தினை ரத்துசெய்யும் இஸ்லாமியர்களுக்கு எதிரான முடிவு கண்டணத்திற்குரியது, இதுபிறமதங்களின் ஜனநாயக உரிமையினை பறிக்கும் செயல், இதனை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றார்.

ஜெ.டி.ஆர்.

சார்ந்த செய்திகள்