2030 ஆண்டில் பொருளாதர இந்தியா 3 ஆம் இடத்தை பிடிக்கும் - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்ச்சி மையத்தில் பயிற்ச்சி நிறைவு செய்த உதவி கமாண்டர், உதவி ஆய்வாளர், துணை உதவி ஆய்வாளர் என 1043 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாத் சிங் இன்று சான்றிதழ்களை வழங்கினார்.
பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பயிற்ச்சி பெற்ற வீரர்களுக்கு கேடயங்களை அவர் வழங்கினார்.
முன்னதாக அவர் திறந்த ஜீப்பில் சென்று தொழிற் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
இந்தியாவும் அமெரிக்காவும் தற்போது தீவிர வாத அச்சுறுத்தல்களை அதிக அளவில் சந்தித்து வருகிறது ,அதனை இந்தியா முறியடித்து வருகிறது ,தற்போது தீவிரவாத தாக்குதல் விஞ்சான ரீதியில் உள்ளதுஅதனையும் முறியடிக்கும் வகையில் இந்தியாவின் பலம் அதிகரித்து உள்ளது .உலக அளவில் ஒரு துணை ராணுவமாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை விளங்கி வருகிறது. தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதை தடுக்க ஒரு சபர் பயிற்ச்சி மையம் ஏற்படுத்த வேண்டும் மத்தய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் குழந்தை படிப்பு செலவு முழுவதும் அரசு ஏற்கும். கொள்கை அளவில் பெண்களுக்கு 33 சதவித இடஒதுகீடு வழங்க முடிவு செய்துள்ளதுமத்திய தொழிற் படையில் இந்த 33 சதவிதம் பெண்கள் உள்ளனர், இது வரவேற்க தக்கது.மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் ஒரு லட்சம் பேர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் உள்ளனர். விமான நிலையங்கள் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது துறை நிறுவனங்களில் இவர்களின் பனி சிறப்பாக அமைந்துள்ளது. தற்போது எல்லை பாதுகாப்பு படையில் மத்திய பாதுகாப்பு படையினரும் அனுப்பப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
- ராஜா