Skip to main content

இன்றே திணறும் சென்னை- அதிகரிக்கும் காற்று மாசு

Published on 30/10/2024 | Edited on 31/10/2024
Increasing air pollution in Chennai

சென்னையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பொழிந்த நிலையில் காற்றின் தரக் குறியீடு 118 ஆக  பதிவாகியுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கீட்டின்படி  காற்றின் தரக் குறியீடு 100லிருந்து 200 ஆக இருந்தால் அது மிதமான மாசுபாட்டை குறிக்கும், 200 முதல் 300 வரை இருந்தால் மோசமான மாசுக் கட்டுப்பாடு, 300 இருந்து 400 வரை இருந்தால் மிக மோசம் என்று குறிக்கும். தீபாவளி பண்டிகை காரணமாக பட்டாசு வெடிப்பதன் மூலம் காற்றின் மாசு அதிகரிப்பது வாடிக்கை. இன்று மாலை 7 மணி நிலவரப்படி சென்னையில் ஒட்டுமொத்த சராசரி காற்றின் தரக்குறியீடு 118 ஆக பதிவாகியுள்ளது.

தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு அதிகரிக்கும் நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான இன்றே சென்னையில் அதிகளவு காற்றுமாசு தரக்குறியீடு பதிவாகியுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல் படி சென்னை மணலியில் அதிமாக காற்றின் தரக் குறியீடு 229 என உள்ளது. வேளச்சேரி இன்னும் பிற பகுதிகளில் காற்றின் தரம் 100க்கு குறைவாக இருந்தாலும் நாளை  பட்டாசு வெடிப்பின் புகை காரணமாக காற்றின் தரம் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்