Skip to main content

கணவன் மனைவி தகராறு... தாய் மகள் விஷம் அருந்தியதில் மகள் இறப்பு!!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020
incident in vilupuram

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ளது செட்டிகுப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி குமார். இவருக்கு கவிதா என்ற மனைவியும் மகாலட்சுமி, கோமதி என இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இதில் மகாலட்சுமி பன்னிரண்டாம் வகுப்பும் கோமதி பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

குமாருக்கும் அவரது மனைவி கவிதாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. எப்போதும் போலநேற்று முன்தினம் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கவிதா மற்றும் அவரது இரண்டு மகள்கள் ஆகிய மூவரும் அன்றைய தினம் இரவு விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளனர்.

மறுநாள் காலையில் யாரும் எழுந்திருக்காததை கண்டு சந்தேகமடைந்த குமார் அவர்களை எழுப்பி உள்ளார். மூவரும் மயக்க நிலையில் கிடந்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த குமார் அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் உதவியுடன் 3 பேரையும் மீட்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒருதனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை நடைபெற்று வந்தது. இதில் சிகிச்சை பலனளிக்காமல் மகாலட்சுமி பரிதாபமாக இறந்து போய்விட மனைவி கவிதா மகள் கோமதி ஆகிய இருவருக்கும்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்