சமீபத்தில் நடந்த நாங்குநேரி இடைத்தோ்தலில், அந்த தொகுதியில் 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள், தங்களை தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிட வலியுறுத்தி இடைத்தோ்தலை புறக்கணித்தனா்.
இதற்காக புதிய தமிழகம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் முதலியவை அதிமுக கூட்டணியில் இருந்தும் இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பாராளுமன்ற தோ்தல் முடிந்ததும் தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார். ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியினா் குற்றம் சாட்டினர். அதனால் தான் கூட்டணிக்கு ஆதரவு கொடுக்காமல் தோ்தலை புறக்கணித்ததாக கூறினார்கள்.
இந்தநிலையில் இன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் குமரி மாவட்ட கலெக்டரின் மனு நீதி நாள் முகாமில் தேவேந்திரகுல வேளாளா் என்று அரசாணை வெளியிடக்கோரி மனு கொடுத்தனா்.