Skip to main content

தேர்தல் கலவரம்... ஆயுதங்களுடன் மோதல்... ஒருவர் பலி பதட்டம்!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

தூத்துக்குடி மாவட்டத்தின் 5 யூனியன்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் நேற்று இரண்டாம் கட்டத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை  கிராமப் பகுதிகளில் அமைதியாக நடந்த தேர்தல், மதியம் சுமார் 5 மணியளவில் மோதலாகிவிட்டது.

 

incident in tutucorine local election


இம்மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் ஊராட்சித் தலைவர் பதவி தனி என்று ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்காக அ.தி.மு.க. ஆதரவாளரான லதா மாசானம் போட்டியிடுகிறார். இவரது கணவர் மாசானசாமி முன்னாள் ஊராட்சித் தலைவர். லதாவை எதிர்த்து தி.மு.க. ஆதரவாளரான இளையராஜா போட்டியிடுகிறார். இவரது ஆதரவாளர் மேட்டூரைச் சேர்ந்த ரேஸ்வண்டி மாரியப்பன். நேற்று வழக்கம் போல் ஒட்டப்பிடாரம் மெயின் சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தது. ஆரம்பம் முதலே பரபரப்பாக நடந்தது.

 

incident in tutucorine local election

 

லதா மாசானம், இளையராஜா இருதரப்பினரின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே நின்றபடி இருந்தனர். காவல் பலப்படுத்தப்படாலும் மதிய உணவுக்கு மேல் அமைதியாக நடந்த நிலையில் வாக்குப் பதிவு முடியப் போகும் முன்பு 5 மணி வாக்கில் இளையராஜா ஆதரவாளர்களான பெருமாள், ரேஸ் வண்டி மாரியப்பன் மற்றும் சிலர் வாக்குச் சாவடி அருகில் வாக்கு சேகரித்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அ.தி.மு.க. வேட்பாளரின் கணவர் மாசான சாமியும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து எதிர்த்துள்ளனர். இதில் முன்னாள் பஞ். தலைவரான மாசானசாமிக்கும் ரேஸ்வண்டி மாரியப்பனுக்கும் முன் பகை இருந்துள்ளதாம். இருதரப்பு வாக்கு வாதத்திலும் வார்த்தைகள் தடித்துள்ளன.

 

incident in tutucorine local election


போலீஸ் தலையிட்டு இருதரப்பையும் கலைத்துள்ளனர். பதட்டநிலையில் ஆத்திரத்தில் திரும்பிய ரேஸ்வண்டி மாரியப்பன் பிறகு தனது ஆதரவாளர்களுடன் சென்று மாசானசாமி ஆதரவாளர்களுடன் வாக்குவாதம் செய்ய இருதரப்பிற்குள் மோதல், அடிதடி, கற்கள் பறக்க கலவரமாகி, இரண்டு தரப்புகளும் ஆயுதங்களுடன் மோதியது.

இந்த மோதலில் மாசானசாமியின் இருசகோதர்களுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டிருக்கிறது. மோதலின் போது கீழே விழுந்த இளையராஜாவின் ஆதரவாளரான ரேஸ்வண்டி மாரியப்பன்  தலையில் பெரிய கல் ஒன்று விழ, பலத்த காயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயம்பட்ட மாசானசாமியின் இரண்டு சகோதரர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

incident in tutucorine local election

 

சம்பவ இடத்திற்கு எஸ்.பி.யான அருண் பாலகோபாலன் விரைந்துள்ளார். ஒட்டப்பிடாரம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்கிறார் மாவட்ட கண்காணிப்பு காவல் அதிகாரி.

 


 

சார்ந்த செய்திகள்