Skip to main content

'உன் கர்ப்பத்துக்கு நான் தான் காரணம்னு எப்படி சொல்ற'– கர்ப்பத்தை கலைக்கச்சொல்லி மிரட்டும் கட்டப்பஞ்சாயத்து கும்பல் 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள  கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான வருண் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கோவிந்தாபுரத்தின் அருகேயுள்ள வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த இரண்டு வருடமாக காதலித்துள்ளார்.

காதலர்கள் ஜாலியாக பலயிடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்படி சென்றயிடத்தில் உன்னை தானே திருமணம் செய்துக்கொள்ள போகிறேன், உன்னை நான் எப்பவும் கைவிடமாட்டேன் எனச்சொல்லி காதலியிடம் நயமாக பேசி உடல் ரீதியான உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதனால் கர்ப்பமான அந்த இளம்பெண், அதுப்பற்றி தனது காதலனான வருணிடம் சமீபத்தில் கூறி திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றுள்ளார்.

 

INCIDENT IN THIRUPATHUR

 

உன் கர்ப்பத்துக்கு நான் தான் காரணம்னு நீ சொல்றதை நான் எப்படி நம்பறது என விதி படத்தின் டைலாக்கை வீசியவன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள மறுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியான அந்த இளம்பெண், தனது குடும்பத்தினரிடம் விஷயத்தை கூறி அழுதுள்ளார். அவர்கள் பெண்ணின் வாழ்க்கையை நினைத்து அதிர்ச்சிந்துப்போய் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார்.

புகார் தந்து ஒருவாரத்துக்கு மேலாகியும் காவல்துறை அந்த இளைஞனை அழைத்து விசாரிக்காமல் கட்டப்பஞ்சாயத்து குருப் ஒன்றிடம் தகவல் அனுப்பியுள்ளனர் போலீஸார். அதனை தொடர்ந்து, தேவலாபுரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து கும்பல், அந்த பெண்ணை அழைத்து 50 ஆயிரம் பணம் தருவான், வாங்கிக்கிட்டு புகாரை வாபஸ் வாங்கிக்கிட்டு ஓடிப்போ, உன்னையெல்லாம் கல்யாணம் செய்துக்கமாட்டான் என பிப்ரவரி 16ந்தேதி பேசி மிரட்டியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளிவந்து ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், திருவண்ணாமலை நகரில் போட்டோகிராபராக உள்ள ஒரு இளைஞர், மிகவும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். இந்த காதலை பெண்ணின் குடும்பத்தார் மறுத்து, நீங்க மேல்சாதிக்காரங்க, ஊர்ல பெரிய குடும்பம் வேண்டாம் என தொடக்கத்திலேயே மறுத்துள்ளனர். கட்டினால் உங்க பொண்ணை தான் கட்டுவன் என அந்த இளைஞன் வாக்குறுதி தந்துள்ளான். காதலில் உறுதியாக இருந்ததால் அந்த இளம்பெண்ணும் காதலித்துள்ளார். 5 வருட காதல் திடீரென நீ வேறு சமூகம் எனச்சொல்லி அவன் திருமணம் செய்துக்கொள்ள மறுக்க காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் தந்துள்ளார். அந்த இளைஞனை போலீஸார் தேடிவருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்