Skip to main content

வியாபாரிடம் நகைக்கொள்ளை... விசாரணைக்கு கைது செய்துபட்டவர் மரணம்... அதிகாரிகள் பணியிடை நீக்கம்

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

மும்பை தங்க நகை வியாபாரி நிதியின்ஜெயின் மற்றும் ஜீவன்சிங் ஆகியோர் 6 கிலோ தங்கத்துடன் திருச்சிக்கு வந்து இங்கு உள்ள முக்கிய நகைக்கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதம் உள்ள 935 கிராம் நகையும் திரும்பி உள்ளார்கள். திருச்சியிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, நகை காணாமல் போயிருக்கிறது. இதுகுறித்து திருவண்ணாமலை போலீசிடம் புகார் வாங்க மறுத்தால் திருச்சி ஐஜி அமல்ராஜிடம் புகார் கொடுத்தனர். இதை விசாரிக்க எஸ்.பி ஜீயாவுதீன்க்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு சம்மந்தமாக விசாரணையில் கொள்ளையர்கள் நம்பர் 1 டோல்கேட்டில் பேருந்தில் ஏறி சமயபுரம் சுங்க சாவடியில் இறங்கியது சிசிடிவி விடியோவில் தெரிந்தது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொள்ளைர்களை தேட ஆரம்பித்தனர்.

 

thiruchy


இதன் அடிப்படையில் இ.பி.ரோட்டை சேர்ந்த முருகன் (வயது 50), அவரது மகன் வீரபாண்டி (33), உறவினர் சுப்ரமணி, பாலா ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்த போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது முருகன் தப்பியோடிய நிலையில் அவர் மூச்சுத் திணறி இறந்ததாக போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.

இறந்த விசாரணை கைதி முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் முருகன் இறந்தது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை குவிந்தனர். முருகனை போலீஸ் விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.

அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இறந்த முருகனின் உறவினர்களிடம் நேற்று பகலில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் போலீசார் மாலையில் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். முருகனை விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்ற போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முருகனின் உடலை வாங்கவில்லை.

 

ui

 

இதற்கிடையில் முருகனின் மகன் வீரபாண்டி திருச்சி அரசு மருத்துவமனையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருட்டு வழக்கு தொடர்பாக எங்கள் 4 பேரையும் தனிப்படை போலீசார் விசாரணைக்காக சமயபுரம் அழைத்து சென்றனர். அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்து எங்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரும்பு குழாய்களால் அடித்தனர். மேலும் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்தனர். வலியால் அலறி துடித்தோம். இதில் எனது தந்தை அங்கேயே இறந்து விட்டார். அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியாது’ என்றார். மேலும் தனது உடலில் ஏற்பட்டிருந்த காயங்களை அவர் காண்பித்தார். இறந்த முருகனின் மகன் வீரபாண்டி புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து முருகனின் உடலை அளவில் அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். இதற்கு இடையில் பணியின் போது கவனக்குறைவாக இருந்தாக தனிப்படை எஸ்.ஐ. செந்தில், தலைமைகாவலர் விஜயகுமார். முதல்நிலை காவலர் நல்லேந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

திருச்சியில் நகைக்கொள்ளை வழக்கும் விசாரணையில் குற்றவாளி இறந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்