மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூர் எவர்பின் பள்ளிக் குழுமம் சார்பில் 1500 மாணவர்களும், 15 ஆசிரியர்களும் கலந்து கொண்டு பள்ளி மைதானத்தில் 15000 சதுர அடி பரப்பில் 2500 மெழுகுவர்த்திகளை ஏற்றி காந்தியின் உருவத்தை வடிவமைத்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது மாணவர்களும், ஆசிரியர்களும் காந்திஜியின் வழியை பின்பற்றி வளமான சமுதாயம் அமைப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதுபற்றி பள்ளியின் தலைமை நிர்வாகி மகேஸ்வரி கூறுகையில், எங்கள் பள்ளிக் குழுமம் சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாட இருக்கிறோம். இந்த அக்டோபர் மாதம் துவங்கி வரும் 2019 அக்டோபர் மாதம் வரை மொத்தம் 150 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய உள்ளோம். இன்று நடைபெறும் இந்த காந்திஜி வடிவமைப்பு எங்களின் முதல் நிகழ்வாகும் என்றார்.
வன்முறையற்ற சமுதாயம், ஆண்பிள்ளைகளின் தூய்மையான ஒழுக்கம், பெண்களின் முழு பாதுபாப்பு, மக்களக்கு கட்டமில்லா சிறந்த கல்வி மற்றும் சுகாதாரம், ஜாதி மத மொழி இன பாகுபாடின்றி திகழும் சமுதாயம் என பல்வேறு குறிக்கோள்களை மையப்படுத்தி இந்த விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம் என மேலும் அவர் தெரிவித்தார்.
வரும் திங்கள்கிழமை அன்று ஆயிரம் மாணவர்கள் மொட்டைபோட்டு காந்திஜி வேடமிட்டு அமைதிக்காக யோகா மற்றும் ஊர்வலம் என நடத்த எவர்வின் பள்ளிக்குழுமம் ஏற்பாடு செய்து வருகிறது.