கீழடி அகழ்வாராய்ச்சியினை முடக்க நினைத்தால்
தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்: சுப. வீரபாண்டியன்
மதுரை மாவட்டம் சிலைமான் அருகில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் வருகின்ற செப்டம்பர் 30 தேதியுடன் முடிவடைந்து விடுவதால் நில உரிமையாளரிடம் அகழ்வாராய்ச்சி நிலத்தினை ஒப்படைக்க இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து இங்கேயே தொடர வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திராவிட கட்சி சார்பில் சுப வீரபாண்டியன், தி மு க கட்சி சார்பில் கண்ணியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உருப்பினர் ஹெலன் டேவிட்சன், தி மு க சிவகங்கை மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கீழடி அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தினையும் பணியாளர்கள் பணி செய்வதையும் பார்வையிட்டனர். அப்பொழுது ஹெலன் டேவிட்சன் மற்றும் சுப. வீரபாண்டியன் ஆகியோர் செய்தியாளரைச் சந்தித்தனர்.
அப்பொழுது அகழ்வாராய்ச்சி தொடர்ந்து இங்கேயே நடத்த அனுதிக்க வேண்டும். தமிழக பாரம்பரியத்தினையும், கலாச்சாரியத்தினையும் அனைவரும் அறிய வேண்டும். பண்டைய காலத்து ஆவணங்கள் பொக்கிஷமாக அரசால் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். கீழடி அகழ்வாராய்ச்சியினை முடக்க நினைத்தால் திராவிடர் கழகம் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் சுப வீரபாண்டியன் தெரிவித்தார். இதே கருத்துக்களை வலியுறுத்தி ஹெலன் டேவிட்சன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
- முகில்