கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால்
மக்கள் விரட்டி அடிக்கிறார்கள்: சீமான் பேச்சு
முத்தலாக் விவகாரத்தில் காட்டிய வேகத்தை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காட்டவில்லை என்று நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நாம்தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவுதின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் முரளிதரன், ராஜாராம் ஆகியோர் தலைமை வகித்தனர். செல்வராசா, முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது:
’’ஆர்கேநகர் இடைத்தேர்தலில் திமுகவினர் தேர்தல் பணியாற்றததால் திமுக தோல்வியடைந்தது.தேர்தலில் பணத்தை முதலீடு செய்பவர்கள் லாபத்தை மட்டுமே எதிர்பார்பார்கள், அவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இருக்காது. லஞ்சம், ஊழல் என்பது தொடங்குவதே ஓட்டுக்கு பணம் கொடுப்பத்தில் இருந்துதான் தொடங்குகிறது.
இந்தியாவில் மேசாமான முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாறிவருகிறது. இது ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுணிவு. கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மக்கள் விரட்டி அடிக்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என்றால் மக்கள் விரட்டியடிப்பார்கள்.
மக்களை காசு கொடுத்தால் தான் வாக்கு என்ற நிலைக்கு 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் தள்ளிவிட்டனர்.
ஓக்கி புயலால் பாதிக்கபட்ட மீனவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது ஆனால் நிவாரணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு கொடுப்பார்களா என்பது சந்தேகம்., 7 ஆண்டுகள் கழித்துதான் நிவாரணம் என்ற மோசமான நிர்வாக முறை உள்ளது.அரசு நினைத்திருந்தால் புயல் ஓய்ந்து 3 நாட்கள் கழித்து போயிருந்தால் கூட நிறைய மீனவர்கள் உயிரை மீட்டிருக்க முடியும் ஆனால் பொறுப்பற்று மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு மீனவர்களை படுகொலை செய்திருக்கிறது.
தமிழகத்தில் மக்கள் நலனில் அக்கறையில்லாமல் நடைபெறும் ஆட்சியை அவர்களே கலைத்துக்கொண்டுவிடுவார்கள்.’’
- பகத்சிங்