Skip to main content

கீரமங்கலத்தில் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து மயங்கிய மாணவனால் பரபரப்பு

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
கீரமங்கலத்தில் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து மயங்கிய மாணவனால் பரபரப்பு

கீரமங்கலம், அக், 4. கீரமங்கலம் அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் போது விஷம் குடித்துவிட்டு பள்ளியில் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரண்மனைக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஹரிகரன் கீரமங்கலம் அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறான். விடுமுறை முடிந்து பள்ளி திறந்த போது பள்ளிக்கு மாணவர்களுடன் வந்த ஹரிகரன் விளையாட்டு திடல் பக்கம் தனியாக சென்று மயங்கி விழும் போது சக மாணவர்கள் பார்த்து ஆசிரியர்களிடம் வந்து கூறியுள்ளனர். உடனே பள்ளி ஆசிரியர்கள் மாணவரிடம் விசாரனை செய்த போது தான் வீட்டில் இருந்த கால்நடைகளுக்காண கொசு மருந்தை குடித்துவிட்டதாக கூறியுள்ளார். அதனால் உடனே கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்த ஆசிரியர்கள் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். விஷம் குடித்தது எதற்கு என்ற காரணத்தை மாணவன் இன்னும் கூடவில்லை. இந்த சம்பவத்தால் பரபரப்பு எற்பட்டுள்ளது.

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்