சேலம் – சென்னை வரையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்மென இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் 1ந்தேதியான இன்று திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு, என் நிலம் – என் உரிமை என்கிற பெயரில் நடைபயணம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றியபோது, நாங்கள் நடைப்பயணத்துக்கு அனுமதிக்கேட்டால், காவல்துறை வழக்கறிஞர் முத்தையன் ( சிபிஐ மா.செ மற்றும் 8 வழிச்சாலை எதிர்ப்புக்குழு ) நடத்தும் இருவருக்கு பதில் தந்துள்ளது. மூன்றாவதாக எங்கள் மாநிலக்குழு உறுப்பினர் வீரபத்திரன்க்கு பதில் தந்துள்ளது. எங்கள் கட்சிக்கு போலிஸ் அதிகாரிகள் ஒரு நிர்வாகியை நியமித்து கட்சியை நடத்துகிறார்கள் போலும் என நக்கல் அடித்தவர் இந்த நடைப்பயண தொடக்கவிழாவுக்கு தடை விதித்துள்ளார்கள். நடைபயணம் செல்ல தடைவிதிக்கவில்லை. நீங்கள் தடுத்தால் தடையை மீறுவோம். கைது செய்யுங்கள், நாங்கள் கவலைப்படமாட்டோம். நீங்கள் அனுமதித்தால் சேலம் போவோம், கைது செய்தால் வேலூர் போவோம். எதற்கும் தயங்கமாட்டோம்.
இந்த சேலம் – சென்னை இடையிலான எட்டுவழிச்சாலையை அனுமதித்தால் அடுத்து தமிழகத்தில் இன்னும் 9 சாலைகள் இதுப்போல் வரும். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்படும். இடதுசாரிகள் தான் தமிழகம் முன்னேறாததுக்கு காரணம் எனப்பேசுகிறார்கள். எங்கள் இயக்கத்தை சேர்ந்த ராமமூர்த்தி தான், நெய்வேலி அனல்மின் நிலையம் வரக்காரணம், எடப்பாடி முதல்வராகயிருக்கும் வரை தமிழகம் வளராது, அமைச்சர் ஒருவரே தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது, 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக கூறினார்.
சேதுகால்வாய் திட்டம் நிறைவேற்றுங்கள் தமிழகம் முன்னேறும், காவிரி பாசன திட்டத்தை நிறைவேற்றுங்கள் டெல்டா மாவட்டம் முன்னேறும், 35 ஆயிரம் நீர்நிலைகள், ஏரிகள் தூர்வார 10 ஆயிரம் ஒதுக்கினால் போதும் தமிழகம் வளரும். இதையாரும் செய்யவில்லை. இந்த 8 வழிச்சாலை போடப்படும் சாலை 1 கி.மீ தூரத்துக்கு 32 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டுள்ளது. இது தாராமா ?, தங்கம்மா ? என தெரியவில்லை என்றார்.
தொடக்கவிழா முடிந்ததும் பாலகிருஷ்ணன் தலைமையில் அனைவரும் நடைப்பயணத்தை துவங்கினர். நடைப்பயணம் தொடங்கிய இடத்தில் இருந்து 50 அடி தூரத்திலுலேயே எஸ்.பி சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலிஸார் கைது செய்ய தடுப்பு வைத்து தடுத்தனர். தடுப்புக்களை தள்ளிவிட்டுவிட்டு விவசாயிகளும், தோழர்களும் முன்னேறினார்கள். அவர்களை இழுத்துப்பிடித்து கைது செய்தனர். கைது செய்வதை கண்டித்து சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 600க்கும் அதிகமானவர்கள் கைதாகினர். அவர்கள் போலிஸ் வேனில் ஏற்றிச்சென்று தனியார் மண்டபத்தில் அடைத்துவைத்துள்ளனர். மாலையில் விடுதலை செய்தபின்பு, நடைப்பயணத்தை துவங்குவேன் எனக்கூறியுள்ளதால் என்ன செய்வது என போலிஸ் மேலிடத்திடம் விவாதித்து வருகிறது.