Skip to main content

முடி கொட்டும் பிரச்சனையால் ஐ.டி. இளைஞர் தூக்குமாட்டி தற்கொலை!

Published on 02/01/2018 | Edited on 02/01/2018
முடி கொட்டும் பிரச்சனையால் ஐ.டி. இளைஞர் தூக்குமாட்டி தற்கொலை!

தலைமுடி உதிர்வு பிரச்சனையால் மன உளைச்சல் ஏற்பட்டு ஐ.டி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மிதுன்ராஜ் (27). இவர் நீண்ட நாட்களாக தலைமுடி உதிர்வு பிரச்சனை மற்றும் அதனால் தலையில் ஏற்பட்ட தோல் வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இதிலிருந்து குணமடைய பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் எந்தப்பலனும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், மதுரை வந்திருந்த மிதுன், தீராத தலைமுடி உதிர்வு பிரச்சனையை எண்ணி கடந்த சில தினங்களாக கவலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தன் தாய் வசந்தியிடமும் தன் கவலையை பகிர்ந்தபோது, அவரும் மிதுனுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஆறுதல் கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை அன்று வசந்தி கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, மிதுன் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியுள்ளார். அவரை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வசந்தி அளித்த புகாரின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மிதுனுக்கு அவரது தாயார் பெண் பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்