Skip to main content

விவசாயிகளின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பேன்; நாகை சிபிஐ வேட்பாளர் பேட்டி

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

விவசாயத்தை  அழிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை டெல்டா மாவட்டங்களில் தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்கிறார் நாகை தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளரான செல்வராசு.

 

 

நாகை நாடாளுமன்ற (தனி)தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராசு  போட்டியிடுகிறார். அவரை கடந்த 20 ம் தேதி திருவாரூரில், அக்கட்சியின் தலைவர் முத்தரசன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அறிமுகம் செய்து பிரச்சாரத்தை துவங்கிவைத்தனர்.

 

cpm

 

இந்தநிலையில் இன்று நாகையில் பிரச்சாரத்தில் இருந்தவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,அதில், " விவசாயத்தை அழிக்க கூடிய ஹைட்ரோ கார்பன், மீத்தேன்,  ஷெல்கேஸ் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை டெல்டா மாவட்டங்களில் தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். எப்போதுமே எங்களின் நிலைபாடு விவசாயிகளின் நலன் என்பதாக இருக்கும் என்பதால், நிச்சயமாக விவசாயிகளின் வாக்கு தங்களுக்கே கிடைக்கும். அதேபோல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வாக்குகளும், வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் வாக்குகளும், பாஜக அரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளும் தங்களுக்கே கிடைக்கும், இதன்மூலம் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்." என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்