கேரளா கொல்லம் பள்ளிமண் இடையூா் பகுதியை சோ்ந்த பிரதீப்- தன்யா தம்பதியினாின் 6 வயது மகள் தேவநந்தா 26-ம் தேதி வீட்டு முன் விளையாடி கொண்டியிருந்த போது திடீரென்று காணவில்லை உடனே அந்த சிறுமியை கண்டுபிடிக்க வேண்டும். கேரளாவில் அடிக்கடி இதே போன்று சம்பவங்கள் நடக்கிறது அதை தடுக்க வேண்டும் என்று மலையாள நடிகைகள் சங்கம் முதல்வா் பினராய் விஜயனுக்கும் டிஜிபி லோக்நாத்பெக்ராவுக்கும் கோாிக்கை வைத்தனா்.
இந்த நிலையில் கேரளா முமுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சிறுமி மாயமான விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்த போலீசாா் சிறுமியை பாலியியல் துன்புறுத்தலுக்காக கடத்தி செல்லபட்டாரா? என்ற கோணத்தில் போலீசாா் பலரை பிடித்து விசாாித்தனா். இந்தநிலையில் 28-ம் தேதி சிறுமியின் வீட்டு பின்னால் ஒடும் ஆற்றில் இருந்து சிறுமியை காயத்துடன் சடலமாக மீட்ட தீயணைப்புபடை வீரா்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு கொண்டு சென்றனா். மேலும் சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதால் அந்த கோணத்தில் போலீசாா் விசாரணையை முடுக்கியுள்ளனா்.
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலவில் 1- ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி பாலியியல் ரீதியில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஆற்றில் விழுந்து இறந்தாரா?என்ற கேள்வி பலதரப்பினாிடம் எழுந்தியிருக்கும் நிலையில் சிறுமியின் உடலை பாா்த்து அவாின் பெற்றோா்கள் கதறி அழுதனா். கண்ணாடி பெட்டிக்குள் இருந்த மகளின் உடலை பாா்த்த தாய் தன்யா பெட்டியை திறங்கள் என் மகளை தொட்டு பாா்க்கணும்னு சொல்லி கதறியது அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கானோாின் கண்களில் ஓரே நேரத்தில் கண்ணீரை வடிய வைத்தது.
அந்த சிறுமியுடன் படித்த சக பிஞ்சு மாணவா்களும் அழுதது சோகத்தை முட்ட வைத்தது.