தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன்
பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமலஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
முன்னதாக நடிகர் கமலஹாசன் தான் அரசியலுக்கு வர இருப்பதாகவும் ஆனால் இருக்கும் கட்சிகளுடன் கூட்ட வைக்க மாட்டேன் என்றும் ஊழலுக்கு எதிராக தனிகட்சி தொடங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்த பின் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கமலஹாசன், நான் உறுதியாக அரசியலுக்கு வருகிறேன், என் முடிவை அறிவிப்பதற்கு முன்பாக நான் என்னை தயார் படுத்தி வருகிறேன். தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
கடந்த 15ம்தேதி நான் அரசியலுக்கு வரலாம், ஆனால் தற்போதுள்ள கட்சியுடன் அல்ல. அரசியலில் என் இலக்குகள் எந்த அரசியல் கட்சியின் கருத்தியலுடனும் பொருந்தாது என்று நான் நினைக்கவில்லை என்றார். அரவிந்த் கேஜ்ரிவால் சிந்திப்பிற்கு முன்னதாக கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சென்று சந்தித்தார். பின்னர் இடது கட்சியில் சேர வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது இலக்கு. திமுக, அதிமுக, பிற கட்சிகள் மக்களுக்கு உதவும் கருவிகள். தவறினால் மற்ற கருவிகளை நாட வேண்டும் என்றார். இதேபோல் ஊழல் நடந்தால், விபத்து நடந்தால் மற்ற மாநில முதல்வர்கள் பதவி விலகுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் தமிழக முதல்வர் விலக வேண்டும் என்று ஏன் யாருமே சொல்லவில்லை என்று சமீபகாலமாக தொடர்ந்து தன் அரசியில் கருத்துகளை அதிரடியாக தெரிவித்து வருகிறார்.