கணக்கும் தெரியாமல், துறையும் தெரியாமல் ஆர்.பி.உதயகுமார் பேசி வருவதாக தமிழக நிதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ''முன்னாள் அமைச்சர், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய உதயகுமார் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு அமைச்சராக இருந்தவர் இவ்வளவு அர்த்தமற்ற அல்லது தவறான விவாதங்களை தகவல்களை பகிர முடியுமா? அப்படி என்றால் இத்தனை வருடம் அவர் அமைச்சராக இருந்ததற்கு கணக்கும் தெரியல, துறையும் தெரியல, கொள்கையும் தெரியல. எதுவுமே தெரியாம எப்படி இத்தனை நாட்கள் அமைச்சராக இருந்தார் என்று எனக்கு புரியவில்லை.
அவர் பேசியதை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து அதை பொதுவிவாதத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அரசியல் விவாதம் அறிவில்லாத விவாதமாக போய்விட்டது என்றால் ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் பெரிய பாதிப்பு. முதலில் அவர் சொல்கிறார் இந்த வருடம் ஈபி ரேட்டையும், ப்ராப்பர்ட்டி டேக்ஸயும் அதிகரித்துள்ளதால் டெபிசிட்டை குறைத்துள்ளார்கள். இது பெரிய வித்தை இல்லை என்கிறார். நான் அடிப்படையில் கேட்கிறேன் இவர் பத்து வருடம் அமைச்சராக இருந்தவர். நான் பேசுவது போன வருடத்துடைய டெசிபிட்டை பற்றாக்குறையை. யாருக்காவது அடிப்படை கணக்கு இருந்தால் இந்த வருடம் மாற்றிய வரியில் போன வருடத்தின் கணக்கை எப்படி திருத்த முடியும்'' என்றார்.