என்ன செய்யப்போகிறேன், எப்படி செய்யப்போகிறேன் என்று சொன்னால் வரவேற்கலாம்: அபினவம் ஜெயராமன்
ரஜினியின் அரசியல் அறிவிப்பையடுத்து பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.
சேலம் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் அபினவம் ஜெயராமன் கூறுகையில்,
தற்போது தமிழகத்தில் வலிமையான அரசியல் தலைவர்கள் இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது. இந்த நேத்தில் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் எட்டுக்கோடி பேரும், உலகளவில் பத்து கோடி மக்களையும் கொண்டுள்ள இந்த மாபெரும் தமிழ் மக்கள் சமூக முன்னேற்றத்துக்கு அவர் என்ன செய்யப்போகிறேன் அதை எப்படி செய்யப்போகிறேன் என்று சொல்வாரேயானால், அவர் சொல்லும் திட்டம் ஏற்புடையதாக இருப்பின் அதை வரவேற்கலாம்.
கேரளாவில், பினராயி விஜயன், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் போல எளிமையான, அறிவார்ந்த செயல்பாடுகள் ரஜினியிடம் இருந்தால் அவருக்கும் நாடாளும் வாய்ப்பை இங்குள்ள மக்கள் ஏற்படுத்திக் கொடுப்பர்கள். இவ்வாறு கூறினார்.
சிவசுப்பிரமணியன்