ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டா பகுதிகள் பாதித்துள்ளது –நித்யானந்த் ஜெயராமன்
ஹைட்ரோ கார்பன் எடுப்பதால், காவிரி டெல்டா பகுதிகளில் சுற்றுச் சூழல் பாதித்துள்ளது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாக சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மண், நிலத்தடி நீர் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்தததில், ஓஎன்ஜிசி மற்றும் சிபிசிஎல்-யின் ஹெட்ரோ கார்பன் திட்டத்தினால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும், எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்.
படம்: அசோக்குமார்