Skip to main content

நடராஜனின் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவமனை தகவல்

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
நடராஜனின் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவமனை தகவல்

கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொண்ட நடராஜனின் உடல்நிலை தேறிவருவதாக குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக குளோபல் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

டிரக்கியாஸ்டோமி முறையில் நடராஜனுக்கு சுவாச உதவி அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கொண்டவர்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு உடல்நிலை சிக்கலாக இருக்கும் என்பதால், தீவிர மருத்துவ கண்காணிப்பில் நடராஜன் இருப்பதாக குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கூறியுள்ளது.

சார்ந்த செய்திகள்