Skip to main content

பிரசவித்த பெண்ணை கீழே தள்ளிய மருத்துவமனை ஊழியர்: கோபப்படும் பொதுமக்கள்..!!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

The hospital employee who pushed down the delivered woman

 

“உங்களுக்கு காசுதான் முக்கியமா, மனித உயிர் முக்கியமில்லையா, எவ்வளவு லஞ்ச காசு கொடுத்தாலும் போதாதா?” என நாகை அரசு மருத்துவமனையில் பிரசவமான பெண்ணை அலட்சியமாக நடத்திய ஊழியரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகவள்ளி. இவரை, பிரசவத்திற்காக அவருடைய தந்தை கடந்த 19ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அன்று மதியமே ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் சூழலில், கரோனா உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகளை எடுப்பதற்காக பிரசவமான முருகவள்ளியை கைவண்டியில் அமர வைத்து அழைத்துச் சென்றார் மருத்துவமனை ஊழியர் உமா.

 

The hospital employee who pushed down the delivered woman

 

வண்டியைத் தள்ளிக்கொண்டு போகிற போக்கில், “ஆண் குழந்தை பிறந்திருக்கு, பணம் கொடுக்க மாட்டீங்களா?” என கேட்டிருக்கிறார் அந்த ஊழியர். “பணம்தான் ஏற்கனவே கொடுத்தாச்சே” என பிரசவித்த பெண்ணின் தந்தை கூறியுள்ளார். உடனே அந்த ஊழியர் “அது மேல் அதிகாரிகளுக்கு, எங்களுக்கு வரவில்லை” என கூறியபடியே அலட்சியமாக வண்டியைத் தள்ளியுள்ளார்.

 

அப்போது பிரசவித்த அந்தப் பெண் கீழே விழும் அளவிற்கு வண்டியைத் தள்ளியிருக்கிறார். ஏற்கனவே படுக்கை வசதிகூட இல்லாமல், மிக கொடூரமான முறையில் முருகவள்ளி அவதிபட்டிருக்கிறார். இந்நிலையில், லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காக மருத்துவமனை ஊழியரே இரக்க மனமில்லாமல் பச்சிளம் தாயை கீழே தள்ளியது பலரையும் ஆத்திரம் அடைய செய்துள்ளது.

 

The hospital employee who pushed down the delivered woman

 

அந்தப் பெண்ணின் உறவினர்களும், சுற்றியிருந்த பொதுமக்களும் மருத்துவமனை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “எவ்வளவு லஞ்ச காசு கொடுத்தாலும் போதாதா? அரசு மருத்துவமனைக்கு எதற்கு வருகிறோம்?” என்று ஆதங்கத்துடன் பெண்மணி கதறும் காட்சிகளைப் பார்த்த மனிதநேயம் கொண்ட அனைவரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்