
கரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக, மாணவர்களின் நலன் கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (16.10.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று (16.10.2023) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.