Skip to main content

தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!

Published on 17/10/2017 | Edited on 17/10/2017
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!

சேலம் நகரிலுள்ள பொன்னம்மாபேட்டையில் இருந்து செவ்வாய்பேட்டை வரையிலும், சேலம்-விருதாசலம் இரயில் பாதை ஓரமாக உள்ள சாலையில் தமிழக அரசுக்கு சொந்தமான ஆறு மதுபானக்கடைகள் உள்ளது.

இந்த கடைகளில் காசு கொடுத்து மது பாட்டில்களை வாங்கும் குடிமகன்கள், அருகிலுள்ள இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, செவ்வாய்பேட்டை பகுதியில், சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரிலுள்ள இரயில்வே தண்டவாளத்தில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்து மது குடித்துள்ளனர்.

அப்போது, சேலம் சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் “எக்மோர் எக்ஸ்பிரஸ்” இரயில் வந்துள்ளது. வண்டி வருவதை பார்த்ததும் சுமாரான போதையில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து ஓட்டம் பிடித்து விட்டனர்.

இந்த நிலையில், கொஞ்சம் போதை அதிகமாக இருந்த  பொன்னம்மாபேட்டை, வடக்கு இரயில்வே தெருவை சேர்ந்த மோகன்ராஜ்(வயது-46), என்பவர் போதையில் எழுந்து ஓட முடியாமல், தண்டவாலத்திலேயே விழுந்துள்ளார். அப்போது, வேகமாக வந்த இரயில் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சேலம் இரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்