Skip to main content

இந்துத்துவ அமைப்புகளால் என் உயிருக்கு அச்சுறுத்தல்: கோவன்

Published on 14/04/2018 | Edited on 14/04/2018
kova


இந்துத்துவ அமைப்புகளால் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என மகஇக பாடகர் கோவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்,

ஏப்ரல் 14 முதல் 29 வரை நடைப்பயணம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் திடீரென நேற்று காவல்துறை அனுமதி வழங்கவில்லை. காவல்துறையினர் பல்வேறு கேள்விகள் கேட்டனர். காவல்துறை எங்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் போல நடத்துகிறது. பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் கூட நடைபயணத்திற்கு தடைவிதிக்கவில்லை. ஆனால் இந்த அரசு தடை செய்கிறது. இது அவமானமாக உள்ளது.

எச்.ராஜா பேச்சால் பல்வேறு கலவரங்கள் ஏற்படுகிறது. ஆனால் எடப்பாடி அரசு அவர் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாது ஏன் போராடுபவர்களை ஒடுக்கும் வகையில் மோடி அரசின் கைப்பாவையாக எடப்பாடி அரசு உள்ளது. ரத யாத்திரை வேண்டாம் என்று தான் பாடினோம்.

தமிழ் மக்களுக்காக இங்கு ஆட்சி நடைபெறவில்லை. மோடிக்காக இங்கு உள்ளவர்கள் ஆட்சி செய்கின்றனர். வீட்டின் பின்புறமாக சீருடை அணியாத காவலர்கள் கைது செய்ய வந்தனர். காவல்துறையின் அணுகுமுறை சட்ட வரம்புகளுக்கு உட்பட்டதாக இல்லை.. எங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

அரசு பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. அதனை மட்டுமே எங்களது பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறோம். என்னுடைய உயிருக்கு இந்துத்துவ அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளது அரசாங்க அடக்குமுறைகளால் எங்களது போராட்டங்களையோ, மக்கள் போராட்டங்களையோ தடுத்து நிறுத்த முடியாது. தடையை மீறி எங்களது நடைப்பயணம் தொடரும். சட்டவிரோதமான இந்த தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்