
சாதிய வேறுபாடுகளை களைந்ஹ்டு இந்துக்கள் ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்று கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. அந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் 5 நாள் பயணமாக அலிகாருக்குச் சென்றுள்ளார். அப்போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “சாதிய வேறுபாடுகளை களைந்து இந்து சமூக மக்கள், ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே மயானம்’ என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து, தங்கள் வீடுகளுக்கு அழைத்து அவர்களுக்கு நல்லிணக்கம், ஒற்றுமை போன்ற செய்திகளை பரப்ப வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மக்களை ஜாதிய அடிப்படையில், மத அடிப்படையில் பிரிக்கக் கூடியது. சாதிய வர்ண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கக் கூடியது என்ற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஆனால் தற்போது அனைத்து ஜாதி மோதல்களையும் முடிவுக்குக் கொண்டு வந்து ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற முழக்கத்தை முன்னெடுப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.