Skip to main content

தீவிரமாக பரவும் கரோனா... 15 நாட்கள் முழு ஊரடங்கு கோரி ஆர்ப்பாட்டம்!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
 Seriously spreading corona infection! Demonstration demanding full curfew for 15 days!

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் விருத்தாசலத்தை சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து அரசு அலுவலகங்களுக்கும், தொழில் வியாபார நிறுவனங்களுக்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் நகரில் தினந்தோறும் குப்பைகளை அகற்றியும், கிருமி நாசினி தெளித்தும் கூட பொதுமக்களின் அதிகப்படியான நடமாட்டம் காரணமாக வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

 

ஆனால் பொதுமக்களோ சரியான முறையில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை முறைப்படி கழுவுதல் உள்ளிட்டவைகளை கடைபிடிக்காமல் துக்க நிகழ்ச்சிகளிலும், விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நோய்த்தொற்றை அதிகப்படுத்துவதாக விருத்தாசலம் நகர மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

 

 

 Seriously spreading corona infection! Demonstration demanding full curfew for 15 days!

 

கடந்த காலங்களில் நோய் தொற்று குறைவாக இருந்தபோது, முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. ஆனால் இறப்பு விகிதமும், நோய் தொற்றும் உயர்ந்து வருகின்ற நிலையில் முழுஊரடங்கு அமல்படுத்தாமல் அலட்சியப்படுத்துவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக நோய்த்தடுப்பு பணிகளில் களப்பணியாற்றிய வட்டாட்சியர்,  ஜவுளிக் கடை ஊழியர்கள் இருவர், வழக்கறிஞர் குடும்பத்தில் இருவர், மளிகை கடை நடத்தியவர், அழகு சாதன பொருட்கள் கடை நடத்தியவர் என சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். திட்டக்குடி சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் நோய் தொற்று தீவிரமாக பரவி வருகின்ற நகரமாக விருத்தாசலம் மாறுவதற்கு முன்பு 15 நாட்கள் முழு நேர ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில், சார் ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழு ஊரடங்கு கோரி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை மனுவாக சார் ஆட்சியர் பிரவீன் குமாரிடம் அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்