பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இடமாற்றத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தனது மகன் 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றான்.மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் ஒரே நுழைவு தேர்வான, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசின் பாடத்திட்டமான, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டம், தமிழக கல்வித்துறை இல்லை.
எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை உருவாக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்த குழு கடந்த 2012-ம் ஆண்டே அமைத்திருந்தாலும், பல காரணங்களால், அந்த குழுவின் பணி முடிவடையவில்லை. தற்போது,புதிய நிபுணர்களை நியமித்து, மீண்டும் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் பணிக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருந்தால் மட்டும் தான், புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். எனவே, பாடத்திட்டம் உருவாக்கும் பணி முடியும் வரை, இந்த குழுவில் உள்ள நிபுணர்கள், அதிகாரிகளை மாற்றக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எம்.ராதாகிருஷ்ணன், வெற்றிச்செல்வன் ஆகியோர் ஆஜராகி ஆஜராகினார்கள். இதன் பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் "புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் மற்றும் பிற அதிகாரிகளை வேறு துறைக்கு பணி மாற்றம் செய்ய தடை விதிப்பதாகவும். அதேபோல, அந்த குழுவில் இடம் பெற்றுள்ள நிபுணர்களையும் மாற்ற அரசுக்கு தடை விதிப்பதாகவும். இந்த குழு இதுவரை என்ன பணிகளை முடித்துள்ளது என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சி.ஜீவா பாரதி.