பாலியல் குற்றங்களின் கீழ் குற்றம் செய்தவரை கைது செய்யும் நடவடிக்கையான போக்ஸோ சட்டத்தில் தமிழக அரசு திருந்தங்களை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
நாமக்கல்லை சேர்ந்த சபரிநாதன் என்பவர் அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதி பார்த்திபன் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார். 16 வயதுக்கு மேல் விருப்பத்தோடு பாலுறவு கொண்டால் குற்றமாகக் கருதாத வகையில் போக்ஸோ சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசிற்கு ஆலோனை வழங்கியுள்ளார்.
அதேபோல் பாலியல் தொடர்பான படங்கள் திரையரங்கில் வெளியிடும் பொழுது புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடலுக்கு கேடு என்பதை போல் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் போக்ஸோ சட்டத்தால் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கும் ஒரு கார்டை திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு போடவேண்டும் எனவும் கூறியுள்ளார்.