Skip to main content

ஹெச்.சி.ரசூல் மறைவு இலக்கிய உலகுக்கு பேரிழப்பு!

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
ஹெச்.சி.ரசூல் மறைவு
 இலக்கிய உலகுக்கு பேரிழப்பு!


இலக்கியவாதியும் கவிஞருமான ஹெச்.சி.ரசூல் இன்று காலமானார். 

தமிழில் எழுதும் இஸ்லாமிய படைப்பாளிகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆளுமை ஹெச்.சி. ரசூல். மைலாஞ்சி, பூட்டிய அறை, இஸ்லாமியப் பெண்ணியம் உள்பட பல படைப்புகளை உருவாக்கியவர். குடிகலாச்சாரம் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை ஆய்வரங்கொன்றில் வாசிக்கப்பட்டதோடு, உயிர்மை இதழிலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஹெச்.சி.ரசூலும் அவரது குடும்பத்தினரும் கன்னியாகுமாரி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையால் ஊர்விலக்கம் செய்யப்பட்டனர்.

தன் மீதான ஊர் நடவடிக்கைக்குப் பின்பும், தன் கருத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து இலக்கிய உலகில் செயல்பட்டுவந்தார் ரசூல். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, இன்று காலை தக்கலையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட ஹெச்.சி.ரசூல். எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். அவரது மறைவு இலக்கிய உலகுக்கு பேரிழப்பு.

சார்ந்த செய்திகள்