
தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை அடுத்த பனையூரில் தனது கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனையை தொடங்கியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமாக 138 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டை மிகப்பெரிய அளவில் வெற்றி மாநாடாக நடத்தி காட்டிய நிர்வாகிகளுக்கும் அதற்காக அமைக்கப்பட்ட குழுவினர்களுக்கும் விஜய் வாழ்த்து தெரிவிக்க இருக்கிறார். மேலும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கும் நிலையில் தற்போது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.