Published on 10/05/2023 | Edited on 10/05/2023

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமிதா கோவில் ஒன்றில் வழிபாடு நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''எனக்கு இரண்டு விஷயங்கள் இருக்கு. ஒன்று இன்னிக்கு என்னுடைய பர்த்டே. இன்னொன்னு கர்நாடகாவில் பாஜக மெஜாரிட்டில ஜெயிக்கணும். நேத்திக்கு தான் நான் கர்நாடகா போயிட்டு வந்தேன். பிஜேபிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்துட்டு இருக்கு. என் பர்த்டேக்கு வந்திருக்கு. எல்லாருக்கு நன்றி'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக முதல்வர் வழக்கு தொடுத்துள்ளாரே என்ற கேள்விக்கு, பதில் சொல்ல தெரியாமல் விழித்த நமிதாவின் காதில் அருகில் இருந்த நிர்வாகி ஒருவர் கிசுகிசுக்க, 'அதை அவர் பாத்துக்குவார். அரசியல் கேள்வி கேட்காதீங்க' என்றார்.