Skip to main content

ஹஜ் புனித யாத்திரை அழைத்து செல்வதாக கூறி, 300க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.1 கோடி மோசடி!

Published on 30/12/2017 | Edited on 30/12/2017
ஹஜ் புனித யாத்திரை அழைத்து செல்வதாக கூறி, 300க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.1 கோடி மோசடி!

ஹஜ் புனித யாத்திரை அழைத்து செல்வதாக கூறி, 300 க்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவைப்புதூர் பகுதியில் நூருல் இமான் டூர்ஸ் என்ற நிறுவனத்தை சையத் முஸ்தபா என்பவர் நடத்தி வந்தார். இவர் கோவையில் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களை ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரை அழைத்து செல்வதாக கூறி, 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை 300 க்கும் மேற்பட்டவர்களிடம் வசூலித்துள்ளார்.

கடந்த 22 ம் தேதி 165 நபர்கள் மெக்கா நகரத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், மற்ற பிரிவினர் 30 ம் தேதி செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் மெக்கா சென்றவர்களை ஒரு ஹோட்டலில் தங்க வைத்து விட்டு அந்நிறுவனத்தினர் ஏமாற்றியதாக வந்த தகவலின் பேரில், சையத் முஸ்தபாவை இங்கிருந்தவர்கள் தொடர்பு கொண்ட போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள், மாநகர காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். மெக்காவில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டு தர வேண்டுமெனவும் புகார் அளித்தவர்கள் வலியுறுத்தினர்.

- அருள்

சார்ந்த செய்திகள்