Skip to main content

பீகாரில் இருந்து வந்த பேருந்தில் குட்கா... போலீசார் விசாரணை!

Published on 19/08/2022 | Edited on 19/08/2022
 Gutka in the bus from Bihar... police investigation!

 

திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில்  சோதனை சாவடியில் தனியார் பேருந்தில் கடத்திவரப்பட்ட 50 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பேருந்தை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணை நடத்தி, பீகாரில் இருந்து காரைக்குடிக்கு வேலையாட்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் குட்காக கடத்திய மிதுன் ரிஷிகேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் குட்கா கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பீகாரிலிருந்து தமிழகத்திற்கு வேலையாட்களை ஏற்றிவந்த பேருந்தில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

துணை ராணுவப்படையினரின் வாகனம் விபத்து; கால் துண்டான நிலையில் வீரர்களுக்கு சிகிச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Accident involving paramilitary personnel on the national highway

ஆவடி துணை ராணுவப் பயிற்சி மையத்தை சேர்ந்த 71 துணை ராணுவ வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) கர்நாடக மாநிலம்  ஷிமோகாவில்  பயிற்சி முடித்து விட்டு மீண்டும் நேற்று 5  இராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம்  பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணை இராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது.

Accident involving paramilitary personnel on the national highway

அதனை தொடர்ந்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள்  மீட்டு அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு தலைமை காவலர் ராமசந்திரன் மற்றும் காவலர் வல்லவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.