Skip to main content

அதிமுகவை பற்றிப் பேச குருமூர்த்திக்கு அருகதை இல்லை - செல்லூர் ராஜூ

Published on 27/12/2017 | Edited on 28/12/2017
அதிமுகவை பற்றிப் பேச குருமூர்த்திக்கு அருகதை இல்லை - செல்லூர் ராஜூ



கூட்டுறவுத்துறை அமைச்சர், செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் தா.வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 63வது தேசிய அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா  நடைபெற்றது.

இதனை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ,

திமுகவின் அழகிரி அந்த கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பற்றி சொல்லியிருப்பது அவர் சொந்த கருத்து. இதனை ஸ்டாலினிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அழகரியை பற்றி நான் அன்று சொன்ன கருத்து என் சொந்த கருத்தே.

திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நான் வாழ்த்து சொல்ல கடமைபட்டுள்ளேன். திமுகவை ஆர்.கே.நகர் மக்கள் டெபாசிட் இழக்க செய்துள்ளனர். இனி எதிர்காலமே திமுக விற்கு கிடையாது என உறுதிப்பட செய்த ஆர்கே நகர் மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

எங்கள் அதிமுகவை பற்றி பேச குருமூர்த்திக்கு அருகதை இல்லை. எங்களை பற்றி பேச யார் அவருக்கு  உரிமை கொடுத்தது? அவருக்கு நாவடக்கம் தேவை.

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி தற்காலிக வெற்றியே. நாங்கள் தான் தினகரனை உயர்ந்த இடத்திலே வைத்தோம். தினகரன் வெற்றி எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் போன தேர்தலில் ஓட்டு கேட்டார்கள் இப்பொழுது நிலை வேறாக இருந்ததால் மக்கள் தினகரன் மீது பரிதாபப்பட்டுவிட்டனர்.

தினகரனுக்கு நாங்கள் இதற்கு முன் நடந்த இடைத் தேர்தலில் வாக்கு கேட்டோம். இப்போது நிலமை வேறு ஆதலால் தான் மக்கள் குழம்பினார்களே தவிர இதனால் எங்களுக்கு கிடைத்திருக்கிற தோல்வி என்பது பெரியதே கிடையாது. ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அமைச்சர்களோடு கலந்துறையாடிவிட்டே மாவட்ட செயலளார்களை நீக்கினார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்