Skip to main content

ஊர்க்காவல் படை பெண் காவலருக்கு, ஆயுதப்படைக் காவலரால் நேர்ந்த கொடுமை..!

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
ஊர்க்காவல் படை பெண் காவலருக்கு, ஆயுதப்படைக் காவலரால் நேர்ந்த கொடுமை..!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சிவபெருமாள் மனைவி லலிதா இரு குழந்தைகளின் தாய். இவர் புதுக்கட்டை ஊர்காவல்படையில் பணி செய்து வருகிறார். இவரது கணவர் சிவபெருமாள் சிங்கப்பூரில் இருக்கிறார்.

லலிதா வழக்கம் போல கடந்த 7ந் தேதி பணிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது அங்கு வந்த பழைய கந்தர்வகோட்டை ராஜேந்திரன் மகன் அறிவுக்கரசு மதுரை ஆயுதப்படை போலிஸ். இவர் லலிதாவின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்து ஒரு ஆட்டோவில் ஏற்றிச் சென்று பிருந்தாவனம் பகுதியில் இறக்கி அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனை தடுத்த லலிதாவின் கை, கால்களை கடுமையாக தாக்கியதில் மறுபடியும் அவர் மயங்கியுள்ளார்.

இந்த நிலையில் லலிதா தனது உறவினர் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு தனக்கு நடக்கும் கொடுமைகளை சொல்லிக் கொண்டிருக்கும் போதே செல்போன் புடுங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு லலிதாவின் கணவர் சிங்கப்பூரில் இருந்து பல முறை தொடர்பு கொண்டும் போன் எடுக்கவில்லை. அந்த நேரத்தில் அவரது உறவினர் பெண் தனக்கு வந்த போன் பற்றிய தகவலை லலிதா கணவர் சிவபெருமாளுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிவபெருமாள், ஊர்காவல்படையை சேர்ந்த வெங்கடேசனை தொடர்பு கொண்டு லலிதாவுக்கு நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து வெங்கடேசன், லலிதாவை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சேர்த்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லலிதா கொடுத்த புகாரின் பேரில் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். மேலும் சிவபெருமாளும் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்து புகார் கொடுத்துள்ளார். போலீசாருடன் இணைந்து வேலை செய்யும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்