8 வழிச்சாலை திட்டம் என்பது மத்திய அரசின் திட்டமே, தமிழக அரசிற்கும், இதற்கும் தொடர்பில்லை. இதில் எங்களை தொடர்புபடுத்துவது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று காலை சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சேலம் - சென்னை 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டமே. தமிழக அரசிற்கும், இதற்கும் தொடர்பில்லை. இதில் எங்களை தொடர்புபடுத்துவது வேடிக்கையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான் இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது. 100 சதவீதம் அவர்களின் முதலீடு தான். பொதுநலனை முன்னிட்டு நிலம் எடுப்பு போன்ற பணிகளில் மாநில அரசு ஒத்துழைப்பு தந்து உதவுகிறது.
8 வழிச்சாலை அமைப்பதே மலைகளில் இருக்கும் வளங்களைக் கொண்டு செல்வதற்காகதான் என மக்கள் கூறும் குற்றச்சாட்டு கற்பனையானது. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை சந்திக்க தயாராக இருக்கிறது. மக்கள் மீது திட்டத்தை திணிக்க வேண்டிய அவசியம் கிடையாது. எட்டுவழிச் சாலைக்கு அவசியம் உள்ளது. வலுக்கட்டாயமாக செய்யவில்லை.