அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி
காஞ்சிபுரத்தை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்த நெசவாளர் ஆனந்தன் மகள் சரிகா. வயது 16. அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன் சரிகாவின் இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்தது போனதால் சென்னை அரசு ராஜுவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். டயாலிஸ் செய்வதற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரகாலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சரிகாவின் உடல்நிலை மிகவும் மோசமானது.
டாக்டர்கள் உடனடியாக சென்னை அரசு ராஜுவ்காந்தி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்ல பரிந்துரை செய்தனர். இந்தநிலையில் 108 ஆம்புலஸ்க்கு தகவல் கொடுத்தும் 7 மணி நேரம் கடந்தே ஆம்புலன்ஸ் வந்தது, பல முறை அழைத்தும் ஆம்புலன்ஸ் அலட்சியமாக இருந்துள்ளது. வேறு வழியில்லாமல் சரிகாவின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தவுடன் அவரின் உத்தரவுக்கு பின்னரே ஆம்புலன்ஸ் வந்து சரிகாவை அழைத்து சென்றது. ஆனால் வழியிலே சரிகா துடிதுடித்து இறந்து போனார்.
உரிய நேரத்திற்கு ஆம்புலன்ஸ் சரிகாவை அழைத்து சென்றிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். காஞ்சிபுரம் மருத்துவமனை வளாகத்தில் பல தனியார் ஆம்புலன்ஸ்கள் உள்ளதால், அவர்கள் மாமுல் அதிகமாக கொடுக்கிறார்களாம். மாமுல் செல்வதால் அரசு ஆம்புலன்ஸ்கள் கண்டும்காணாமல் இருந்துவரும் நிலை இங்குள்ளது என்று என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
அரவிந்த்