நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதிப்பதில்லை: ஆர்.எஸ்.பாரதி
நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதிப்பதில்லை என தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசிய கொடியேற்றி வைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போதைய ஆட்சியால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதிப்பதில்லை என கூறினார்.
படம் - அசோக்குமார்