மழை வேண்டி கும்பகோணம் பகுதி இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சிறப்புத் தொழுகை நடத்திவருகின்றனர். அதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைப் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. குடிதண்ணீருக்கு கூட நான்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் தேடி போகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 200 நாட்களுக்கு மேலாக டெல்டா பகுதியில் மழைபொழியவில்லை, கடந்த ஆண்டு பெய்த மழைநீரையும் அதிமுக அரசு சேமித்து நிலத்தடி நீராதாரத்தை உயர்த்த வழிதெறியாமல் மிகவும் பாதுகாப்பாக கடலில் கலக்க செய்துவிட்டனர். கஜாபுயலுக்கு பிறகு ஒரு சொட்டு மழைக்கூட டெல்டா மாவட்டங்களில் பெய்யவில்லை. வழக்கமாக கர்நாடகாவில் இருந்து பெற வேண்டிய காவிரி தண்ணீரையும் அதிமுக அரசு கேட்டுப்பெற முடியாமல், ஜீன் 12 ம் தேதி திறக்கவேண்டிய மேட்டூர் அணையும் திறக்கப்படவில்லை.
வறட்சியின் கோரதாண்டவத்தினால் நிலத்தடி நீராதாரம் கிடு கிடுவென சரிந்து கீழேப்போய்விட்டது. இதனால் தண்ணீருக்கு மக்கள் அல்லல்படும் அவநிலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுக அரசை நம்பி பயனில்லை என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ள பொதுமக்கள் அங்காங்கே யாகம், பூஜை, தொழுகை, பிராத்தனை என ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில் கும்பகோணம் சாந்தி நகரில் உள்ள பள்ளிவாசல் அருகிலுள்ள திடலில் இஸ்லாமியகள் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்."தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜமாத் செயலாளர் தாவூத் கைசர் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் ஆண்கள் சட்டையை கழட்டி மாத்தி போட்டு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர். அதேபோல் ஆவணியாபுரம் மற்றும் ஆடுதுறை மஹல்லா ஜமாஅத்துகள் இணைந்து இன்று காலை 7.30 மணிக்கு கிரசன்ட் பள்ளி மைதானத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதிலும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உலகுக்கே நீராதார வழிமுறைகளை கண்டுபிடித்துக் கொடுத்த தமிழக மக்களை குடிதண்ணீருக்கு கையேந்தும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டது நிர்வாக திறனற்ற அதிமுக அரசு.