Skip to main content

அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு: ஓட்டுநர், நடத்துனர் மீது வழக்கு

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு: ஓட்டுநர், நடத்துனர் மீது வழக்கு

கோவை, தடாகம் சாலையில் உள்ள வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது-30). இவர், தொண்டாமுத்தூரில் பூ வியாபாரம் செய்து வந்தார். ஆனைகட்டியில் இருந்து காந்திபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் வேலாண்டிபாளையத்தில் மணிகண்டன் ஏறியுள்ளார்.

அப்போது பேருந்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பேருந்து தடாகம் சாலையில், வேளாண் துணை இயக்குநர் அலுவலகம் அருகே வந்தபோது ஓட்டுநர் எதிர்பாராதவிதமாக பிரேக் போட்டுள்ளார். அப்போது படிக்கட்டில் நின்று பயணம் செய்த மணிகண்டன் தவறி நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். 

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிசிச்சை பெற்று வந்த மணிகண்டன் உயிரிழந்தார்.
இதுகுறித்து, கோவை மாநகரப் போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸார் பேருந்து ஓட்டுநர் இரவிகுமார் மற்றும் நடத்துநர் கலியபெருமாள் ஆகியோர் மீது அதிக அளவில் பயணிகளை ஏற்றியது, அதிவேகமாக வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்