Published on 24/09/2022 | Edited on 24/09/2022
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டில் நடந்த அகழாய்வில் தங்கம் கிடைத்துள்ளது. கடந்த ஜூலை 3- ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் அகழாய்வில் மூன்று செங்கல் சுவர்கள் போன்ற வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
தொல்லியல் மேட்டில் தென் கிழக்கு பகுதியில் கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள், குறியீடுகளோடு கூடிய பானை ஓடுகள், ரொமானிய ஓடுகளும் கண்டறியப்பட்டன. மேலும், ஒன்றரை கிராம் அளவில் தங்கத்தால் ஆன அணிகலன்களும் கிடைத்துள்ளன. இவை தவிர, கண்ணாடி அணிகலன்கள், சுடுமண் பொம்மைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.