







பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில், அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரே, பிரசன்ன விநாயகர் சன்னதி அருகே, தோட்டம் அமைப்பதற்காக மண்ணை தோண்டிய போது 505 தங்க காசுகள் கொண்ட புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் வாழை பயிரிட தோண்டிய போது உத்திரம் மரம் கீழ் பகுதியில் மண்பானை ஒன்றில் தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த தங்க காசுகளின் மொத்த எடை (505 தங்க காசுகள்) 1,716 கிராம் தங்கம் ஆகும். தங்க காசுகளின் தற்போதைய மதிப்பு 61 லட்சம் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தங்க காசுகளை திருக்கோவில் ஆணையர், மற்றும் நகை மதிப்பிட்டாளர்கள், மற்றும் வைரம் நுண் அறிஞர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். தங்க காசுகளில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்ரீஅனுமன் உள்பட பல்வேறு சுவாமிகளின் உருவப்படங்கள் பொறிக்கபட்டுள்ளது. திருவானைக்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தங்க காசுகள் அனைத்தும் மதிப்பு போடப்பட்டு ஸ்ரீரங்கம் தாசில்தார் உதவியுடன் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.