Skip to main content

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மார்ச் 5ல் தீர்ப்பு!

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

gokul raj incident case court judgement datet announced

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் வரும் மார்ச் 5- ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். 

 

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த சுவாதி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மாணவியைக் காதலித்ததால், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர்,  திட்டமிட்டு ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 

 

கோகுல்ராஜ் மற்றும் யுவராஜ் தரப்பில் வாதங்கள் மற்றும் சாட்சிகளிடம் முழு விசாரணை நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் பிப். 9- ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 

 

குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிவடைந்ததால் இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற மார்ச் 5- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்